Please upgrade your browser to make full use of twiends.   chrome   firefox   ie   safari  
Create your own wall, sign in free!
David Yogeesen
8 followers
Want to Grow Your Twitter Following, Free?
காதலில் தோற்றவர்களும் புலம்புகிறார்கள், ஜெயித்து திருமணம் செய்தவர்களும் புலம்புகிறார்கள் :-) ஆண்களுக்கு என்ன தான் வேணுமாம்? :-)
சொல்லாத காதலில் தயக்கம் உண்டு !! சொல்லி, புரிந்துகொள்ளாத காதலில் சோகம் உண்டு !! புரிந்தும் கைகூடாத காதலில் கண்ணீரும் உண்டு !!
சாமியிடம் பேச பூசாரி தேவையில்லை என்பதே எனது பகுத்தறிவு.
இரவு தலையணையின் மேல் தலை வைக்கும்போது, மனதில் தோன்றும் எண்ணமே,அந்த நாள் எப்படி இருந்தது என்பதை உணர்த்துகிறது !! நல்லிரவு :-)
தம்மைப்பற்றி பிறரிடம் பகிர்ந்துகொள்ள விரும்புவர்கள்,நிஜ வாழ்விலும் சில நம்பிக்கையான நண்பர்களை சம்பாதித்துக் கொள்ளுதல் நலம்.
வேர்களை ஆராய்ந்து கொண்டிருப்பவருக்கு கிளையில் பூத்திருக்கும் பூக்களின் அழகு புலப்படுவதில்லை
அழகு தான் முதன்மை எனும் மனோபாவம் பெண்களிடம் இன்னும் இருப்பதாலேயே விதவிதமான பேஷியல் பேக்குகள் பேர் சொல்லி பார்லர்கள் கல்லா கட்டுகின்றன
தற்காலிகமான உணர்வுகளைக்கொண்டு நிரந்தரமான முடிவுகளை எடுக்காதீர்கள்...!
உணர்ச்சிவசப்படும் போது தான், நமது எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கேற்ப நிறைய வார்த்தைகள் கிடைக்கப்பெறுகிறோம்..
சண்டைக்குப் பின், நீ முதலில் அழைப்பதா, நான் முதலில் அழைப்பதா என்பதிலேயே முடிந்து போகின்றன சில அழகான நட்புகள் !!
சண்டைக்குப்பின் தான் சில உறவுகளில் நெருக்கம் கூடுகிறது!
விலகி சென்றுவிடுவார்களோ என இறுக பற்றிக்கொள்ளும் உறவுகள் தான், இறுக்கத்தின் வலி தாங்காமல் பிரிந்துசெல்ல துடிக்கின்றன....
மனிதர்களின் நேரத்தை மதிக்காத நிறுவனங்களைப் பட்டியலிட்டால், அதில் முதல் இடம் மருத்துவமனைகளுக்கே !!
உறக்கம் வராத இரவுகள், நினைவுகளின் அடுக்குகளிலிருந்து இனியவற்றை மீட்டு,ரசித்து, மீண்டும் பத்திரமாய் ஒளித்து வைப்பதிலே கழிகிறது.நல்லிரவு
உடல்நலக் குறைவின்போது கூட, ஓய்வு கிடைக்காதது, ஒரு பெண்ணின் வாழ்வில் உச்சபட்ச சோகம் !!
துயரங்கள் ஒவ்வொன்றாக ஓடி வருகின்றன என்னிடத்தில், பழைய நினைவுகளை சுமந்தபடி. நான் பலவீனமாக இருக்கிறேனென எப்படித்தான் தெரிகிறதோ?
நட்பின் எல்லையை, மனம் நோகாதவாறு பிறருக்குப் புரியவைக்கும் கலை, சிலருக்கு மட்டுமே கைகூடி வருகிறது !!
இருந்தா குக்கர் மாதிரி இருக்கனும். வெயிட் போட்டதுக்கு அப்புறம்தான் குஷியா விசிலடிக்குது :-)
எந்த இழப்பையுமே பணத்தால் ஈடுகட்ட முடியாது - தொலைந்தது பணமாக இருந்தால் கூட !!
வெட்டியாய் இருக்கும்போது வேலைக்கு போ என்பார்கள்..அதுவே வேலை அதிகமாகிவிட்டால்,போ,உனக்கெல்லாம் இப்போ நேரமே இல்லைன்னு சலிச்சுக்குவார்கள்..!
பேசாமல் சீனா போயிரலாம்னு இருக்கேன்..! 'பெய்ஜிங்கில் கணவர் கிடைக்காது திண்டாடும் 5 இலட்சம் பெண்கள்'-செய்தி
எழுத்துப்பிழை,இலக்கணப்பிழை இல்லாமல் தமிழில் 1பக்கம் எழுதச்சொன்னால் நூற்றுக்கு ஐம்பது பேருக்கு மேல் நிச்சயம் பெயில் ஆவார்கள் போல் தெரிகிறது!
பேஸ்புக்ல லைக்கு,கமெண்ட்டு வேலை செய்யலைன்னு பூரா பயலுகளும் ட்விட்டர் வந்திட்டானுக என்னோட சேர்த்து ;)
தம்பின்னு சொல்ற அக்காக்களையும் அண்ணான்னு சொல்ற தங்கைகளையும் எனக்கு பிடிப்பதில்லை..!
ஆடத்தெரியுமா பாடத்தெரியுமா என்று கேட்பதை விட பொண்ணுக்கு சமைக்கத்தெரியுமா என்று கேட்டுப்பார்த்தால்,90% பொண்ணுகளுக்கு கல்யாணமே நடக்காது போல ;)
டபுள் மீனிங்க் ஸ்டேட்டஸ் போடும்போது பொண்ணுக யாருமே லைக் பண்ணலைன்னா என்னா மீனிங்க்? - - பொண்ணுங்க எல்லாருமே கெட்டு போயிட்டாங்க பாஸ்!
ஜிப்பு வைச்ச சட்டை போடும் பெண்கள்,அந்த ஜிப்பின் காரணமாகவே மேலதிக கவர்ச்சியை பெற்றுவிடுகின்றனர்..!
சீதையின் கற்பின் மீதும்,காந்தியின் புனிதம் மீதும் குற்றம் கண்டுபிடிப்பவன் தான் நவீன அறிவாளி..!
என்னிக்கு நீ ப்ரீயா இருக்கணும்னு நெனைச்ச நேரத்தில் உன்னால் ப்ரீயாக இருக்க முடிகிறதோ,அன்று தான் நீ பொருத்தமான தொழில் பார்க்கிறாய் என அர்த்தம்
1993இல் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற விடுதலைப் போராளி நெல்சன் மண்டேலாவின் பெயர் அமெரிக்காவின் தீவிரவாத பட்டியலில் 2008 வரை இருந்தது..!
மேட்டர் என்னமோ ஒண்ணுதான்! எதிர்ல வர்றவங்க முழுப்பேரையும் அடிக்கிறாங்க.உதைக்கிறாங்க.ஏரியா பக்கம் வந்தின்னா வெட்டுவேங்கிறாங்க.!
ஆடை நீக்கி பருகவா எனக்கேட்டேன்... ஆடையுடனேயே பருகு என்றாள்;பால் பெண்பால்..!
பாலிற்குக் கூட அதைக் காய்ச்சி ஆடை போட்டு, அதை விலத்தி என்று பால் வேற்றுமையை உருவாக்கியிருக்கின்றது இந்த சமூக அமைப்பு.... ச்ச்ச்சா....
பாலை கட்டாயம் ஆடை நீக்கித்தான் பால் குடிக்கணும்னு இல்லை..ஆடையை மெதுவாக விலக்கிவிட்டு கூட குடித்திரலாம்..!
சும்மா ஹீரோவாட்டம் இருந்தவங்களையும் டை அடிச்சு முடிய வெள்ளையடிச்சு கிழவனாட்டம் திரியவைச்ச பெருமை தலையயே சாரும்..!
நகரப்புற வாழ்க்கைக்கு அடிமைப்பட்டுவிட்டவர்கள்,தங்கள் வாழ் நாளில் இனிமேல் ராஜா இசைகேட்டுக்கொண்டு நட்சத்திர வானத்தை பார்த்து தூங்கமுடியாது..!
கையெழுத்து & தலைஎழுத்து மாறா விட்டாலும் காதலித்தால் மனம் மகிழ்வு அடையும். காதலிக்க நிறைய இருக்கு . அதனால் காதல் செய்வீர் !
காதலித்து பார் உன் கையெழுத்து அழகாகும் காத‌லிப்ப‌தை விட்டு பார் உன் த‌லையெழுத்து அழ‌காகும் நீங்கள் எதை தேர்வு செய்யப்போகிறீர்கள்...?
பரபரக்கும் மனது உன் மெளனத்தால் சிறகொடிந்து வீழ... ஒற்றை தேவதையாய் சுருண்டு கிடக்கிறேன் உன் மெளனம் எனும் பாதையில் ..!
பல தருணங்களில் சொல்வதற்கு ஒன்றுமே இல்லாமல் போய்விடுகிறது.
நாம் எதை எதையெல்லாம் ரசிக்கிறோம் என்பதை கவனித்தாலே நாம் யார் என்பது நமக்குத்தெரிந்துவிடும்.
மனித இனத்திலும் இயற்கையழகு ஆணுக்கே என்பதை நிரம்பி வழியும் பெண்களுக்கான "பியூட்டி பார்லர்களே" தெரிவித்துக்கொள்கின்றன.
பச்சத் தண்ணியில் குளிப்பதும் பச்சத்தண்ணி கலந்து மது குடிப்பதும் உடலுக்கு நல்லது.
காலம்போன காலத்துல காதல் கவிதை சொல்லிட்டு திரியிதுக #த்தூஊஊஊ
பூனை நடையெல்லாம் அவளுக்கு ஒத்து வராது யானை நடைதான் சரி
சிரிக்காமலேயே குழி விழுந்த கன்னம் அவளது #டொக்கு
வாழ்வே மாயம் படத்துக்கு இந்த ''புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடுன்னு'' விட்டு விட்டு போடுறதுக்கு பதில மொத்தமாவே போட்டுடலாம்
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட வேண்டாம்,திருமணத்தால் சொர்க்கம் நிச்சயமானால் போதும்.
உடனிருப்பவரின் ரகசியங்களைத் தெரிந்திருப்பதை பெருமையாக நினைப்பவர்களால் நல்ல நண்பராக இருக்க முடியாது..!!
மகிழ்ச்சியை அளந்து பார்க்காதீர்கள் , ஒரு வேளை குறைவாக இருந்தால் அதற்கும் சேர்த்து துன்பப்படுவீர்கள்